குடி போதையில் கேட்ட அந்த வார்த்தை.. மேடையில் மனமுடைந்த ஏ.ஆர்.ரஹ்மான் - நடந்தது என்ன?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வு குறித்துப் பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் திரையுலகில் இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மான். ரோஜா படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.தொடர்ந்து பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து, பாலிவுட்டிலும் தடம் பதித்து இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.
ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வு குறித்துப் பேட்டியளித்துள்ளார்.
நிகழ்வு
அந்த பேட்டியில், ஒரு நாள் என்னுடைய இசைக்குழுவிலிருந்த கிட்டார்ஸ்ட் ஒருவர் நன்றாகக் குடித்து இருந்தார். அப்போது என்னிடம் வந்து நீ என்ன வாசிக்கிறாய்.. படங்களுக்கான இசையை மட்டும் தான வாசிக்கிறாய் என்றார். அந்த நொடியில் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சில ஆண்டுகள் பிறகு தான் புரிந்தது என்னுடைய இசையைப் பற்றி அவர் சொன்னது. அதன் பிறகு தான் என்னுடைய சொந்த இசையை அமைக்க ஆரம்பித்தேன். மேலும் குடிகார கிட்டார்ஸ்ட் பேச்சு தான் என்னைத் தனித்துவமான இசையை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்தது எனத் தெரிவித்தார்.