என் தந்தை ஒரு லெஜெண்ட்..ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்தி - மகன் அமீன் சொன்ன ஒரு வார்த்தை!
தனது தந்தையின் ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதைப் பார்க்கும்போது மனமுடைவதாக அமீன் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வதந்தி
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனை சாய்ரா பானு ஆகியோர் 29 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சாய்ரா பானு ஏ.ஆர். ரகுமானை நேற்று பிரிவதாக அறிவித்தது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஏ.ஆர். ரகுமான் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தனர். மேலும் தனது தந்தையின் ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதைப் பார்க்கும்போது மனமுடைவதாக அமீன் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் என் தந்தை ஒரு லெஜெண்ட்.
அமீன் ரஹ்மான்
திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதைப் பார்க்கும்போது மனமுடைகிறது.
ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதனைக் காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே அமீன் ரஹ்மான் எனத் தெரிவித்துள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
