ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா விவாகரத்து - மகன் அமீன் உருக்கமான வேண்டுகோள்
ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா விவாகரத்து தொடர்பாக அவர்களது மகன் அமீன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து
ஆஸ்கார், கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்று உலகளவில் இந்திய இசையின் அடையாளமாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
அமீன் வேண்டுகோள்
29 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். கதிஜா மற்றும் அமீன் இசை துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தனது பெற்றோர் விவாகரத்து முடிவை அறிவித்ததையடுத்து அவரது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், " இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி" என கூறியுள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
