ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்; என்ன காரணம்?

Tamil Cinema A R Rahman Divorce
By Karthikraja Nov 19, 2024 05:21 PM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

ar rahman divorce

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

ஹனிமூனில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்; வேறு அறைக்கு சென்ற மனைவி - போட்டுடைத்த பிரபலம்

ஹனிமூனில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்; வேறு அறைக்கு சென்ற மனைவி - போட்டுடைத்த பிரபலம்

விவாகரத்து

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ar rahman wife saira banu divorce

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்" என கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.