ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Kerala India Actors
By Swetha Dec 30, 2024 05:33 AM GMT
Report

பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர்

 மலையாள நடிகர் திலீப் சங்கர் திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவரது கதாப்பாத்திரங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Actor Dileep Shankar Found Dead In Hotel Room

அதேபோல அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 19ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

பிரபல பெண் யூ-டியூபர்.. கொலை செய்துவிட்டு சடலத்துடன் தங்கிய இளைஞர் - பகீர் பின்னணி!

பிரபல பெண் யூ-டியூபர்.. கொலை செய்துவிட்டு சடலத்துடன் தங்கிய இளைஞர் - பகீர் பின்னணி!

அறையில் சடலம்

அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து சந்தேகமடைந்த ஓட்டலில் உள்ள சிலர், அவரது அறையில் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Actor Dileep Shankar Found Dead In Hotel Room

மேலும், இது பற்றி விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதில் அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. திலீப் சங்கர் மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.