பிரபல பெண் யூ-டியூபர்.. கொலை செய்துவிட்டு சடலத்துடன் தங்கிய இளைஞர் - பகீர் பின்னணி!
பெண் யூ-டியூபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூ-டியூபர் கொலை
மாயா கோகோய் என்ற பிரபல இளம்பெண் யூ-டியூபர் அசாமைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பெங்களுரில் உள்ள எச்எஸ்ஆர் லெ-அவுட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஆரவ் ஹர்னியுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் கடந்த 23ம் தேதி பெங்களுாரு இந்திரா நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். இதையடுத்து, கடந்த 24ம் தேதி மாயா கோகோய்யை, ஆரவ் என்ற இளைஞர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு
பகீர் பின்னணி
அங்கேயே சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிறகு நேற்று காலை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,
மாயா கோகோய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் பெண் யூ-டியூபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
