மீதமுள்ள 3 பேரையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!
3 பேரை இலங்கைக்கு அனுப்பத் தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்கள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாகவே தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று சாந்தன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில்,
அவர் இறப்பிற்கு பின் உடல் இலங்கை கொண்டுச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் சிறப்பு முகாமில் இருப்பதாகவும்,
அரசு கோரிக்கை
தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கோரி உள்துறை அமைச்சரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தொடர்பான வழக்கில் தெரிவித்துள்ளார்.
அந்த கோரிக்கை நிலுவையில் உள்ளதால், மூவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என அரசு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அப்போது, பதிலளித்துள்ள மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேஷ், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழக்ககோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்று தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து, 3 பேர் தொடர்பான இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.