சிபிஐ அதிகாரி எனக் கூறி ஆடைகளை களைய செய்த கொடூரம் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்!
வீடியோ காலில் மர்ப நபர் ஒருவர் இளம் பெண்ணின் ஆடைகளைக் கழற்றச் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை
மும்பை போரிவலி பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் அந்தேரியில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் இவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய மர்ப நபர், டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி எனக் கூறி பேசியுள்ளார்.
அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அந்த இளம் பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு இளம் பெண் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர் இளம் பெண்ணிடம் மும்பையில் ஓட்டலில் அறை எடுத்துத் தங்குமாறு கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண், இது குறித்து முழுமையாக விசாரிக்காமல் ஓட்டலுக்கு சென்று அறை எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது வீடியோ காலில் வந்த மர்ம நபர் தனது அக்கோண்டிற்கு ரூ.1.8 லட்சத்தைச் செலுத்தச் சொல்லியுள்ளார்.
அதன்பிறகு வீடியோ காலிலிருந்த அந்த மர்ப நபர் இளம் பெண்ணின் ஆடைகளைக் கழற்றச் சொல்லியுள்ளார்.
வீடியோ கால்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் முடியாது என மறுத்துள்ளார். தொடர்ந்து மிரட்டியதால் அந்த இளம்பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்றுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் ஆடையில்லாமல் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மே மேற்கொண்டு வருகின்றனர்.