சாலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - ஆபாச வீடியோவை.. சிறுமி எடுத்த விபரித முடிவு!

Sexual harassment Uttar Pradesh Crime
By Vidhya Senthil Dec 01, 2024 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ப நபர்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி.இவர் கடந்த மாதம் 23-ந் தேதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை 2 மர்ப நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ஆசிட்டை குடித்து தற்கொலை

இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் வீடியோவை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் எனச் சிறுமியை மிரட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

வாடகை தாயாக வந்த பெண் ..7வது மாடியில் இருந்து குடித்து தற்கொலை - விசாரணை அதிர்ச்சி!

வாடகை தாயாக வந்த பெண் ..7வது மாடியில் இருந்து குடித்து தற்கொலை - விசாரணை அதிர்ச்சி!

இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பாலியல் வன்கொடுமை

மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதித்ததால் அவரது உயிர் பிழைத்தார்.இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளவதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சிறுமி கூறியுள்ளார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ஆசிட்டை குடித்து தற்கொலை

பின்னர் இது குறித்துக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் குற்றவாளிகள் 2 பேரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.