புரட்டிப் போட்ட புழுதிப் புயல் - ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!
புழுதிப் புயல் பேனர் விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
புழுதிப் புயல் விபத்து
மும்பையில், 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசி மழையும் பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 59-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காட்கோபர் பகுதியில் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.
9 பேர் பலி
மும்பையில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடுமையான புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தின் விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.