ஐபிஎல் முக்கிய வீரரை தூக்கிய மும்பை இந்தியன்ஸ் - பவர்பிளே கில்லாடிக்கு அடித்த ஜாக்பாட்
மும்பை இந்தியன்ஸ் அணியில் அல்லா கசான்ஃபர் நீக்கப்பட்டிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ்
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசான்ஃபரை மும்பை இந்தியன்ஸ் அணி 4.8 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சீசனிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை மும்பை நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.
முக்கிய வீரர் விலகல்
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் முஜிபுர் ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டிருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.
இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.