உச்சத்தில் பிரச்சனை; லண்டன் புறப்படும் தோனி - பெரும் சோகத்தில் ரசிகர்கள்!
கால் தசை நார் வலிக்காக எம்.எஸ்.தோனி அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது
எம்.எஸ்.தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மேலும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்ற சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி, கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வு முடிவு
இதற்காக அவர் லண்டனுக்கு செல்லவுள்ளதாகவும் , இந்த சிகிச்சையிலிருந்து குணமாக 5 - 6 மாதங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், சிகிச்சையை முடித்துவிட்டு தனது ஓய்வு முடிவு குறித்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காலில் வலியுடன் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியது சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சியிலும், அதே சமயம் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் விரைவில் குணமடைந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.