CSK-வை எலிமினேட் செய்த RCB-க்கு காத்திருக்கும் பெரிய கண்டம் - அப்போ ஈசாலா கப்பு?

Chennai Super Kings Rajasthan Royals Royal Challengers Bangalore Cricket IPL 2024
By Jiyath May 20, 2024 11:08 AM GMT
Report

நாளை மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை - பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

CSK-வை எலிமினேட் செய்த RCB-க்கு காத்திருக்கும் பெரிய கண்டம் - அப்போ ஈசாலா கப்பு? | Ipl Rajasthan Vs Bangalore In Eliminator Match

இதனிடையே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றி பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், கோப்பையை கனவு கண்ட ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.  

போட்டியில் தோற்றால் என்ன? நாய் அப்படி தான் இருக்கும் - எம்.எஸ்.தோனி பளீச்!

போட்டியில் தோற்றால் என்ன? நாய் அப்படி தான் இருக்கும் - எம்.எஸ்.தோனி பளீச்!

எலிமினேட்டர் 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் விளையாடும். 

CSK-வை எலிமினேட் செய்த RCB-க்கு காத்திருக்கும் பெரிய கண்டம் - அப்போ ஈசாலா கப்பு? | Ipl Rajasthan Vs Bangalore In Eliminator Match

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெரும் அணி இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் விளையாடும்.

இதில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். தங்களது அணியை வீழ்த்தி பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், அவர்கள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதால் சென்னை ரசிகர்கள் சற்று ஆறுதலுடன் இருக்கின்றனர்.  

CSK- க்கு கேப்டனாகி இருக்க வேண்டியது நான் தான்; ஆனால் நடந்தது.. போட்டுடைத்த வீரர்!

CSK- க்கு கேப்டனாகி இருக்க வேண்டியது நான் தான்; ஆனால் நடந்தது.. போட்டுடைத்த வீரர்!