இது மட்டும் முடியவில்லை என்றால், உலக கோப்பை ஆட முடியாது - தோனி எச்சரிக்கை

MS Dhoni Indian Cricket Team
By Sumathi Aug 19, 2024 09:00 AM GMT
Report

உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவது குறித்து ஸ்ரீதர் தகவல் பகிர்ந்துள்ளார்.

உடல் தகுதி

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில்,

ms dhoni

2014 ஆம் ஆண்டு இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் அக்டோபர் மாதம் டெல்லியில் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்த போதும் மோசமான பில்டிங் காரணமாக அந்த போட்டியில் இந்தியா தோற்றது.

நீதிமன்றம் சென்ற பிரீத்தி ஜிந்தா - பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11.5% பங்குகள் விற்பனை?

நீதிமன்றம் சென்ற பிரீத்தி ஜிந்தா - பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11.5% பங்குகள் விற்பனை?

ஸ்ரீதர் குறிப்பு

பில்டிங்கில் இந்திய அணி சொதப்பியதால் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி கடும் கோபத்தில் வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று தோனி கடுமையாக அனைவரிடம் நடந்து கொண்டார். அப்போது தோனி பேசுகையில் நமது முழு திறமை வெளிப்படுத்தி நாம் விளையாடவில்லை.

coach sridhar

நாம் பல விஷயங்களை மிஸ் செய்கின்றோம். இது எல்லாம் உணர்ந்து விளையாட வேண்டும். வீரர்களுக்கு உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம். வீரர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உடல் தகுதியும் எட்டவில்லை என்றால் 2015 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாது.

நீங்கள் எவ்வளவு சாதித்தாலும் உடல் தகுதி இல்லை என்றால் உலகக் கோப்பை தொடரில் நீங்கள் இடம் பெற முடியாது என்று தோனி கடும் கோபமாக பேசினார் உடல் தகுதி விஷயத்தில் தோனி தான் இந்திய அணியின் முன்னோடியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.