இதெல்லாம் எனக்கு ஜுஜுபி; தோனியால அதெல்லாம் முடியாது - பாண்ட்யா பளீச்!

Hardik Pandya MS Dhoni Chennai Super Kings Mumbai Indians IPL 2024
By Jiyath May 07, 2024 11:23 AM GMT
Report

தனது தோல்விகள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். 

ஹர்திக் பாண்ட்யா

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்விகளால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இதெல்லாம் எனக்கு ஜுஜுபி; தோனியால அதெல்லாம் முடியாது - பாண்ட்யா பளீச்! | Ms Dhoni Cant Teach All This Says Hardik Pandya

இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, அதில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் மும்பை அணியின் தோல்விகளுக்கு சொதப்பலான முடிவுகளை எடுத்த ஹர்திக் பாண்ட்யா தான் முக்கிய காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் "நான் எப்போதும் பொறுப்பை விரும்பும் ஒருவனாக இருக்கிறேன்.

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

கற்பிக்க முடியாது

என்னை பொறுத்த வரை இந்த தோல்விகள் என் தவறுகளை சுட்டிக் காண்பித்து, அதில் உள்ள பாடங்களை கற்பதற்கான வாய்ப்பை பற்றியதாகும். அந்த அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது.

இதெல்லாம் எனக்கு ஜுஜுபி; தோனியால அதெல்லாம் முடியாது - பாண்ட்யா பளீச்! | Ms Dhoni Cant Teach All This Says Hardik Pandya

உங்கள் நெருங்கிய உதவியாளர் அல்லது ரோல் மாடல் அல்லது மஹி பாய் (எம்.எஸ்.தோனி) போன்றவரால் கூட கற்றுத்தர முடியாது. எனவே சில தோல்விகளை வைத்து உங்களால் அனுபவ பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில் தோல்விகள் கிடைக்கும்போதுதான் உங்களுடைய வேலை என்ன? நம்மால் எதில் சிறப்பாக செயல்பட முடியும்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.