அந்த ஹீரோவுடன் நடிக்க ஒரு இரவு தங்க சொன்னார் - பிரபல நடிகை வேதனை!

Bollywood
By Sumathi Oct 16, 2023 05:30 PM GMT
Report

நடிகை மிருனாள் நவேல் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மிருனாள் நவேல்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை மிருனாள் நவேல். இவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில்,

அந்த ஹீரோவுடன் நடிக்க ஒரு இரவு தங்க சொன்னார் - பிரபல நடிகை வேதனை! | Mrinal Navell Shared About Adjustment Issues

"பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையை சிறிய நடிகைகள் முதல் பெரிய நடிகைகள் வரை கடந்து வந்து இருக்கிறார்கள். எனக்கும் அது நேர்ந்தது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க நடிகை தேர்வு நடத்தினார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

அங்கு நான் சென்று இருந்தேன். அப்போது ஏஜெண்டு ஒருவர் நடிக்க வந்தவர்களை பரிசீலித்து இறுதியில் இருவரை தேர்வு செய்து இருக்கிறோம். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்.

அந்த ஹீரோவுடன் நடிக்க ஒரு இரவு தங்க சொன்னார் - பிரபல நடிகை வேதனை! | Mrinal Navell Shared About Adjustment Issues

உங்களை தேர்வு செய்தால் நீங்கள் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து விளம்பர படத்தில் நடிக்கலாம் என்று தெரிவித்தார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் மறுநாள் விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு உடன்பட வேண்டும் என்றும், ஒரு இரவு தங்க வேண்டும் என்றும் குறுந்தகவல் அனுப்பினார்.

சாதாரணமா அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க; அப்போ அதைதான் செய்வேன் - மனமுடைந்த கிரண்!

சாதாரணமா அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க; அப்போ அதைதான் செய்வேன் - மனமுடைந்த கிரண்!

அதை கேட்டு என் உடம்பெல்லாம் எரிந்தது. இந்த மாதிரி குறுக்கு வழியில் நடிக்க அவசியம் இல்லை என்றேன். உடனே அவர் மிகசிறந்த வாய்ப்பு இழந்து விடாதே. எல்லோரும் இதற்கு உடன்பட்டுத்தான் தேர்வாகிறார்கள். நான் திட்டி விட்டேன். அந்த சம்பவம் மனதில் அப்படியே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.