சமோசா தரல: வெறும் டீ, பிஸ்கட் தான் - ‛இந்தியா’ கூட்டணியில் பரபரப்பை கிளப்பிய எம்பி!

Indian National Congress Delhi
By Sumathi Dec 21, 2023 05:57 AM GMT
Report

சமோசா வழங்கப்படவில்லை என எம்பி சுனில் குமார் பிந்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எம்பி சுனில் குமார் பிந்து

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், காங்கிரஸ், திமுக, ஜேடியூ, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 எதிர்க் கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது.

சமோசா தரல: வெறும் டீ, பிஸ்கட் தான் - ‛இந்தியா’ கூட்டணியில் பரபரப்பை கிளப்பிய எம்பி! | Mp Sunil Kumar Pintu Slams Congress For Samosa

இந்த கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மீது அதிருப்தி காட்டும் முக்கிய கட்சிகள் - விரிசலாகும் இந்தியா கூட்டணி...??

காங்கிரஸ் மீது அதிருப்தி காட்டும் முக்கிய கட்சிகள் - விரிசலாகும் இந்தியா கூட்டணி...??

நிதி பற்றாக்குறை

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடிஎஸ்) கட்சியை சேர்ந்த எம்பி சுனில் குமார் பிந்து, நேற்றைய மீட்டிங்கில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனாலும் நேற்றைய கூட்டத்தில் டீ, பிஸ்கட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

mp-sunil-kumar-pintu

ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், கட்சிக்கு ரூ.138, ரூ.1380 அல்லது ரூ.13,800 நன்கொடை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. நன்கொடைகள் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன்.

இதனால் நேற்றைய கூட்டம் சமோசா இல்லாமல் வெறும் டீ மற்றும் பிஸ்கட்டுடன் முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதமின்றி முடித்து கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.