கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் - காங்கிரஸ் எங்களுக்கு எதிரியல்ல - ஜெயக்குமார் அதிரடி..!!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவின் ஜெயகுமார் காங்கிரஸ்'ஸை தங்கள் கூட்டணிக்கு வர வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயக்குமார் பேட்டி
வரும் நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு பெரும் சவாலான ஒன்றாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பாஜக கூட்டணியில் வெளியேறிய சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ள அதிமுக கூட்டணி அமைத்திடவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில், இன்னும் தேமுதிக, பாமக போன்ற முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாக முடிவாகாத நிலையில், அதிரடி நகர்வாக அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு
சென்னை பாரிஸ் கார்னரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், “கூட்டணிக்கு தாங்கள்(அதிமுக) யாரையும் அழைக்க தேவையில்லை என்று குறிப்பிட்டு, 40 தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றிபெறப் போகிறது என உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தெளிவுபடுத்தி விட்டோம் என்று தங்களின் நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்தி பாஜகவுக்கு கூட்டணிக்கான கதவு மூடிவிட்டது, இனி திறக்காது என்றது மட்டுமின்றி, காங்கிரஸ் அதிமுகவுக்கு எதிரியில்லை என்றும் காங்கிரஸ் உள்பட அனைவருக்கும் தங்க கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது” என்று அதிரடியாக தெரிவித்தார்.