அண்ணாமலையின் அதிகப்பிரசங்கித்தனம் - அசிங்கப்படவைக்கக்கூடாது..!! எஸ்.வி.சேகர் விமர்சனம்!!

S Ve Sekhar Tamil nadu BJP K. Annamalai
By Karthick Dec 18, 2023 03:54 AM GMT
Report

வெள்ளப்பாதிப்பு பணிகள் குறித்து தமிழக அரசை மத்தியக் குழு சம்பிரதாயத்துக்கு தான் பாரட்டியது என்றும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை கருத்து

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் சந்தித்த பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய ஆய்வு குழு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

sv-shekhar-condemns-bjp-state-president-annamalai

ஆனால், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வெள்ள பாதிப்பை எதிர்கொண்டது குறித்து தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு தெரிவித்து இருப்பது சம்பிரதாயமானது என குறிப்பிட்டு, அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

அதிகப்பிரசங்கித்தனம்

மத்திய அரசு அதிகாரிகள் ஒரு போதும் மாநில அரசு அதிகாரிகளை குற்றம்சாட்டமாட்டார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், பாதிப்புகளைப் பார்வையிட வந்த மத்தியக் குழு சம்பிரதாயத்துக்கு தான் தமிழக அரசை பாரட்டியது என்றும் ஆனால், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

sv-shekhar-condemns-bjp-state-president-annamalai

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி எஸ்.வி சேகர் அவரை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய தலைமை சந்தோஷப்பட்டு தமிழக தலைவரா அண்ணாமலையை போட்டது கூட இங்க எவ்வளவோ பேருக்கு உடன்பாடு இல்லை. நாங்க பொறுத்துக்கலையா. அதிகப்பிரசங்கித்தனமா பேசி நம்ம மேலிடத்தையே அசிங்க்கப்பட வைக்கக்கூடாது. புரியுதா Ex. IPS என குறிப்பிட்டுள்ளார்.