காங்கிரஸ் மீது அதிருப்தி காட்டும் முக்கிய கட்சிகள் - விரிசலாகும் இந்தியா கூட்டணி...??

M K Stalin Rahul Gandhi India
By Karthick Nov 03, 2023 04:26 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்தியா கூட்டணி

மத்தியில் வலுவாக இருக்கும் பாஜகவை எதிர்த்து இரண்டு முறை தோல்வியை சந்தித்த காங்கிரஸ் தற்போது புது கூட்டணி யுக்தியை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் வலுவாக இருக்கும் பல கட்சிகளை ஒன்றிணைத்து புது கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

problems-in-india-allaince

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னின்று உருவாகிவரும் இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக போன்ற இணக்கமான கட்சிகள் மட்டுமின்றி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆணித்தரமாக எதிர்த்து வந்த கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நீட் விலக்கே இலக்கு...அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

நீட் விலக்கே இலக்கு...அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

இதில் முக்கியமான விஷயமென்னவென்றால், இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு எவ்வாறு அமையும் என்பதில் தான் பெரும் குழப்பங்கள் வர கூடும். அது தற்போதே வெளிப்பட துவங்கியிருக்கின்றது.   

ஏற்படும் விரிசல்கள்

சில வாரங்கள் முன்பு, பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மீ கட்சி, கூட்டணி என்பது மத்தியில் தான் என கூறி, மாநிலத்தில் தாங்கள் தனித்தே தான் போட்டி என கூறியது. அதுவே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிதிஷ் குமாரின் கருத்துக்கள் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.

problems-in-india-allaince

நிதிஷ் குமார் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் கவனம் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தலில் தான் அதிகவனம் செலுத்தி வருகின்றது என்றார். 5 மாநில தேர்தல் - தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

problems-in-india-allaince

இதில் தான் தங்களது முழுக்கவனத்தையும் காங்கிரஸ் செலுத்துகிறதே, ஆகையால் இந்தியா கூட்டணி முன்னோக்கி செல்லவில்லை என பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுவே நேற்று முதல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் இன்று விமர்சிக்கும் வகையில் கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேச மாநிலத்துள்ள 80 இடங்களில் 65-இல் போட்டியிடுவோம் என கூறினார்.

problems-in-india-allaince

மொத்தமாகவுள்ள 80-இல் 65-இல் போட்டியிட அக்கட்சி விரும்பினால் மீதமிருக்கும் 15-இல் (கூட்டணி கட்சிகளோடு) தான் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் வருகின்றது. இது போன்ற கருத்துக்கள் தான் தற்போது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உண்டாகியிருக்கின்றது. இந்தியா கட்சிகள் கூட்டணி வெளிவரும் என பாஜக கூறிவரும் நிலையில், கட்சிகளுக்குள் விரிசல் தற்போதே உண்டாவது கூட்டணியை தான் சிதைக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.