என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் ஆந்திர மக்களைக் குறித்தே உள்ளது- எம்.பி. ராகுல் காந்தி!
என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மற்றும் தெலங்கானா மக்களைக் குறித்தே உள்ளது எனக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கனமழை - வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்துள்ளனர் .சுமார் 4.5 லட்சம் மக்கள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது .மேலும் பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தச் சுழலில் நிவாரப் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வெள்ளம் மற்றும் இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மற்றும் தெலங்கானா மக்களைக் குறித்தே உள்ளது.
ராகுல் காந்தி
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரப் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்துகிறேன்.
வெள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், மீண்டு வருவதற்கும் தெலங்கானா அரசு அயராது உழைத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு, ஆந்திர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.