UPSC க்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் அரசு அதிகாரிகள் நியமனம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Rahul Gandhi Narendra Modi
By Karthikraja Aug 18, 2024 10:58 AM GMT
Report

UPSCயில் லேட்டரல் என்ட்ரி மூலம் அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி

மத்திய அரசின் முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதால் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது என எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

rahul gandhi

அந்த பதிவில், "மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(UPSC) மூலம் அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் தேர்வு செய்து இந்தியா அரசியலமைப்பின் மீது மோடி தாக்குதல் நடத்துகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC வகுப்பினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது. 

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா? கனிமொழி கேள்வி

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா? கனிமொழி கேள்வி

மோடியின் உத்தரவாதம்

நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறுவதில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். அதை மேம்படுத்துவதற்குப் பதிலாக, லேட்டரல் என்ட்ரி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் தள்ளப்படுகிறார்கள்.

இது UPSCக்கு தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கியமான அரசுப் பதவிகளில் அமர்ந்து என்ன செய்வார்கள் என்பதற்கு செபி ஒரு தெளிவான உதாரணம், அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவரானார். 

நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்க்கும். ஐஏஎஸ் தனியார்மயமாக்கல் என்பது இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர மோடியின் உத்தரவாதம்". என தெரிவித்துள்ளார்.