இது உணர்ச்சிகரமான தருணம்! அம்மா நம்பி குடும்ப பொறுப்பை தந்துள்ளார் - ராகுல் காந்தி உருக்கம்!

Indian National Congress Rahul Gandhi Uttar Pradesh Lok Sabha Election 2024
By Swetha May 04, 2024 07:32 AM GMT
Report

ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் ராகுல் காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.

ராகுல் காந்தி 

  நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . நாடு முழுவதும் வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கான தீவிர பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது உணர்ச்சிகரமான தருணம்! அம்மா நம்பி குடும்ப பொறுப்பை தந்துள்ளார் - ராகுல் காந்தி உருக்கம்! | Rahul First Reaction After Raebareli Nomination

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவையும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராகுல் காந்தி, ரேபரேலியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடன் சென்றனர். ராகுல் காந்தி ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எதிர்க்கட்சியான பாஜக தரப்பிலிருந்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

உருக்கம்

இதனையடுத்து வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது குடும்பத்தினர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது தனக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். ரேபரேலியில் இருந்து நியமனம் என்பது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம்!

இது உணர்ச்சிகரமான தருணம்! அம்மா நம்பி குடும்ப பொறுப்பை தந்துள்ளார் - ராகுல் காந்தி உருக்கம்! | Rahul First Reaction After Raebareli Nomination

என் அம்மா மிகுந்த நம்பிக்கையுடன் குடும்ப பணியிடத்தின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளார். அமேதி மற்றும் ரேபரேலி எனக்கு வேறுபட்டவை அல்ல.இரண்டுமே எனது குடும்பம்.

40 ஆண்டுகளாக இப்பகுதியில் பணியாற்றி வரும் கிஷோரி லால் அமேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இந்தப் போராட்டத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிற்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.