BREAKING NEWS: ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டில் ED ரெய்டு - பாஜகவை கலாய்த்த எம்.பி மஹுவா!
இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக பதிவொன்றை எம்.பி மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 முடிவடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியானது குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இதற்கிடையில் போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.
போட்டி முடிந்தவுடன் கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸிடம் ஒப்படைத்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி "உலகக் கோப்பை தொடரில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்!
இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டம், இன்றைய மகத்தான வெற்றியில் உச்சகட்டத்தை எட்டியது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி மஹுவா கிண்டல்
இதற்கு மத்தியில், பாஜக தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறிவைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில்,
பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் ""பிரேக்கிங் நியூஸ்: ஆஸ்திரேலிய பிரதமரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு...
அகமதாபாத் ஸ்டேடியத்தின் பெயர் ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றம்... ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி" என பதிவிட்டுள்ளார். இது இப்போது பேசுபொருளாகியுள்ளது.
In other news:
— Mahua Moitra (@MahuaMoitra) November 19, 2023
Ahmedabad Stadium has been renamed - India loses World Cup finals at Jawahar Lal Nehru Cricket Stadium.
And.. pic.twitter.com/oCaD4w6XqK