உதயநிதியை முதலமைச்சராக்க திட்டம் போடுறாங்க; நடக்கவே நடக்காது.. - எடப்பாடி பழனிசாமி!

Udhayanidhi Stalin Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Dharmapuri
By Jiyath Nov 20, 2023 05:09 AM GMT
Report

ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர், அது ஒருபோதும் நடக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தருமபுரியில் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

உதயநிதியை முதலமைச்சராக்க திட்டம் போடுறாங்க; நடக்கவே நடக்காது.. - எடப்பாடி பழனிசாமி! | Dmks Plan Will Never Happen Edappadi Palanisamy

திருமணங்களை நடத்தி வைத்தார் பின்னர் பேசிய அவர் "ஏழைப் பெண்களின் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால், இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்.

நீட் தேர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசி வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

அதிமுகவை பொறுத்தவரை இந்த இரண்டே ஜாதிதான்.. - போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவை பொறுத்தவரை இந்த இரண்டே ஜாதிதான்.. - போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி!

நடக்கவே நடக்காது!

காங்கிரஸும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அந்த இரு கட்சிகளும் தான். திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வதென தெரியாமல் அக்கட்சி தலைமை தவிக்கிறது என கூறியிருந்தார்.

உதயநிதியை முதலமைச்சராக்க திட்டம் போடுறாங்க; நடக்கவே நடக்காது.. - எடப்பாடி பழனிசாமி! | Dmks Plan Will Never Happen Edappadi Palanisamy

இவையெல்லாம், திமுக ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். மன்னராட்சி முறையைப் போல, திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின், தற்போது ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்" என்று பேசியுள்ளார்.