அதிமுகவை பொறுத்தவரை இந்த இரண்டே ஜாதிதான்.. - போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுகவை பொறுத்தவரை இரண்டே ஜாதிதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தருமபுரியில் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது "அதிமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது.
அதிமுகவில் தான் தருமபுரி மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தோம். இணையக்கல்புதூர் அணைக்கட்டில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரிநீரை கொண்டு வந்த திட்டத்தை அதிமுக அரசுதான் கொண்டு வந்தது. அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவின் திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அதிமுகவில் இரண்டு ஜாதி
அதிமுகவை பொறுத்தவரை இரண்டே ஜாதிதான் ஒன்று ஆண் சாதி, இன்னொன்ரு பெண் சாதி, ஆனால் பாஜக கட்சியில் இருந்து நாம் விலகியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவை சேர்ந்தவர்கள் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவுக்கு அதிமுக பினாமியாக செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். அதிமுகவும் பாஜகவும் ஏற்கெனவே கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டோம். ஆனால் ஸ்டாலின் அவர்களும் அவர்களின் சகாக்களும் திட்டமிட்டு விஷமத்தனமாக பேசி வருகிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை ஏமாற்றி பெற்று வந்த திமுகவினருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்" என்று அவர் பேசியுள்ளார்.