பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் - என்ன பின்னணி!
பாம்பை பிடிக்க வந்த நபரை கடித்த ராஜநாகம் திடீரென மரணமடைந்தது.
ராஜநாகம் மரணம்
மத்திய பிரதேசம், சாகர் -குரை சாலையில் உள்ள தடுப்புச் சுவர் அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜநாகம் ஒன்று இருப்பதாக, பாம்பு பிடி வீரர் சந்திரகுமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அவர் அங்குச் சென்று 5 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தார். அப்போது அந்த நாகம் திடீரென பிடியில் இருந்து விலகி, அவரின் 2 கட்டை விரல்களையும் கடித்துள்ளது. இருப்பினும் பை ஒன்றில் ராஜநாகத்தை அடைத்துவிட்டார்.
என்ன காரணம்?
உடனே அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியில் இருக்கும் சந்திரகுமார், மன தைரியத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.
அதன்பின், சந்திரகுமார் தன்னை பாம்பு கடித்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவரை கடித்த ராஜநாகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது.
ராஜநாகத்தை பிளாஸ்டிக் பையில் அடைத்ததால் அதிலிருந்து வெளியேற முடியாம அதிலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, வனத்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.