பாம்பு பிடி வீரருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த பயங்கரம்!
கோவை அருகே கட்டுவிரியன் பாம்பை பிடிக்க முயன்றபோது, பாம்புப் பிடிக்கும் நபர் பரிதாப உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை
கோவை மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட கடையின் உரிமையாளர் பாம்புபிடி வீரர் கணுவாய் பகுதியைச் சேர்ந்த முரளிதரன்(35) என்பவரை அழைத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முரளிதரன் பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட்டார்.
உயிரிழப்பு
அப்போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்த போது கட்டுவிரியன் பாம்பு இருந்த பையை கீழே போட்டுள்ளார் . இதனால் பையிலிருந்து வெளியே வந்த பாம்பு காலில் கடித்திருந்தது.
இதனால் அவர் நிகழ்விடத்திலேயே முரளிதரன் உயிரிழந்தார்
கோவையில் கட்டுவிரியன் பாம்பை பிடிக்க முயன்றபோது, பாம்புப் பிடிக்கும் நபர் பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.