பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தும்..SP வந்திதா பாண்டேவிற்கு கனிமொழி MP ஆதரவு!
பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
எம்.பி. கனிமொழி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி எஸ் பி வருண்குமாருக்கும் சமீபகாலமாக வார்த்தை போர் நிலவி வருகிறது. இதனால் திருச்சி எஸ் பி வருண்குமார் குறித்தும் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளராக வந்திதா பாண்டே குறித்தும் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
இதற்கு எதிராக அரசியல் கட்சி பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, வந்திதா பாண்டேவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளத்தில் பதிவில் : பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.
இழிச்செயல்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் திருமிகு. வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.