தமிழர் பண்பாட்டுப்படி கொடி...என் தம்பி விஜய்க்கு உரிமை இல்லையா? சீமான் ஆதரவு!
தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார்.
தவெக கொடி
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் கட்சியின் கொடி, சின்னம் குறித்து தெரிவிக்காமல் இருந்த நிலையில்,
நேற்று அதன் அறிமுக விழா நடைபெற்றது. சென்னை பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியின் மையத்தில் மஞ்சளும், மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் அமைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமான் ஆதரவு
இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விவிதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி கொடிக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியிருப்பது, விஜய் தொடங்கிய கட்சிக்கொடியில் என்ன சர்ச்சை இருக்கிறது.
யானை தனி மனிதனுக்கோ, கட்சிக்கோ சொந்தமா?. யானையை கட்சிக்கொடியில் வைக்க என் தம்பி விஜய்க்கு உரிமை இல்லையா?. எங்களுடைய மரபு யானைப் படை வைத்து, போரில் வென்று வெற்றி வாகை மலரை சூடுவது,
புறநானூறு படித்தால் தெரியும். தமிழர் பண்பாட்டு மரபுப்படி கொடியை வடிவமைத்ததை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.