தமிழக வெற்றிக் கழக கொடி; விடாமல் துரத்தும் பிரச்சனை..விஜய் மீது பாய்ந்த புகார்!

Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Swetha Aug 23, 2024 05:42 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக கொடி

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் கட்சியின் கொடி, சின்னம் குறித்து தெரிவிக்காமல் இருந்த நிலையில்,

தமிழக வெற்றிக் கழக கொடி; விடாமல் துரத்தும் பிரச்சனை..விஜய் மீது பாய்ந்த புகார்! | Complaint Files Against Tvk Leader Vijay

நேற்று அதன் அறிமுக விழா நடைபெற்றது. சென்னை பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியின் மையத்தில் மஞ்சளும்,மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.

பெரும் சிக்கலில் தவெக கொடி..சின்னத்தை நீக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை?

பெரும் சிக்கலில் தவெக கொடி..சின்னத்தை நீக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை?

பாய்ந்த புகார்

அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் அமைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக கொடி; விடாமல் துரத்தும் பிரச்சனை..விஜய் மீது பாய்ந்த புகார்! | Complaint Files Against Tvk Leader Vijay

அவர் மீது அளித்த புகார் மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்க கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.