அரசியலிலும் டைரக்டர் ஆக களமிறங்கும் சீமான் - அடடே தகவல்!
சினிமா தாண்டி சீமான் அரசியலில் டைரக்டராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அரசியலில் களமிறங்கியப் பின் சினிமாவில் திரைப்படம் இயக்குவதை நிறுத்து விட்டார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் தனித்து களம் காண உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே இருந்த சின்னம் பறிக்கப்பட்ட நிலையில், புதிதாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியலில் இயக்குநர்
தற்போது, வேட்பாளர்களையும் அவர்கள் வாக்குறுதிகளையும் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் 40 தொகுதி வேட்பாளர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்தி சீமான் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
மருத்துவம், வக்கீல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அந்தந்த துறை சார்ந்த கெட் அப்களில் வேட்பாளர்களை தனித்தனியாக பேசவைத்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறுவது போன்ற காட்சிகளை பதிவு செய்துள்ளார்.