வெற்றிக்கு காரணமே செந்தில் பாலாஜிதான்..சிறையிலேயே அவர் செஞ்சது - ஜோதிமணி உருக்கம்!
தனது வெற்றி குறித்து ஜோதிமணி பகிர்ந்த ட்வீர் கவனம் பெற்றுள்ளது.
ஜோதிமணி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோகமாக வென்றது. கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி களமிறங்கினார்.
அதிமுக சார்பில் தங்கவேலும், பாஜக சார்பில் வி.வி.செந்தில்நாதனும் போட்டியிட்டனர். பரப்புரைக்குச் சென்ற சில இடங்களில் ஜோதிமணிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும், ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
செந்தில் பாலாஜி வியூகம்
இதற்கு காரணமாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், அங்கு இருந்தபடியே வியூகங்களை வகுத்து ஆதரவாளர்கள் மூலம் வெற்றிபெற வைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில்,
“கரூர் தொகுதியில் 2வது முறையாக வெற்றியைத் தேடித்தந்த திமுக அமைச்சர்கள் உள்பட இந்தியா கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து நன்றி சொன்னேன். இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் என்னுடைய பணி முழுமை அடையாது. நேரில் சந்திக்க முடியவில்லை.
எனினும், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தைக் கைவிடாத செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.