சிறையில் செந்தில் பாலாஜி; கோவையில் சைலண்டா பார்த்த வேலை - அண்ணாமலை அவுட்!
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே பல்வேறு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
அண்ணாமலை
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கினார். திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். அதிமுகவின் வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
இங்கு கடுமையான மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுகவின் கை ஓங்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி செக்
மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3ஆம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தேர்தலில் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யுகங்களை வகுக்க, வார்டு வாரியாக எப்படி பணிகளை செய்ய வேண்டும் என்று கோவையிலும் கரூரிலும் பாடம் எடுத்து இருக்கிறார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.