அண்ணாமலை மீது கடும் கோபம்; அதனால் தான் அமித் ஷா கோவையில் வேலை கூட பார்க்கல..
அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி
பாஜகவில் நடக்கும் மோதல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், என் மண் என் மக்கள் என்று அண்ணாமலை நடத்திய யாத்திரைக்கு பின் பெரிய அளவில் பாஜகவிற்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜகவிற்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அடிப்படையாக் பாஜக போட்டியிட்ட இடங்களில் பூத் கமிட்டி இல்லை. அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் கூட பூத் கமிட்டிகள் இல்லை. பாஜகவிற்கு இதனால் பெரிய பலன் இல்லை.
அண்ணாமலை யாத்திரையால் இந்த பலன் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏற்படவில்லை. உள்ளூர் அளவில் சேர்ந்தவர்கள் யாரும் கட்சியில் பெரிதாக பலன் கொடுக்கவில்லை. அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக உள்ளார். அதனால்தான் கோவையில் அண்ணாமலைக்கு அமித் ஷா வேலை பார்க்கவில்லை.
[https://ibctamilnadu.com/article/comedian-actress-aarthi-joined-bjp-tamilnadu-1712648165
அமித் ஷா ஆவேசம்
அவருக்கு ரிசல்ட் வேண்டும். இங்கே வந்த அமித் ஷா அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி உடைத்ததை அமித் ஷா விரும்பவில்லை. அண்ணாமலை மீது அமித் ஷா வெறுப்பில் இருக்கிறார்.
இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். அதுவும் கூட்டணியை கூட அண்ணாமலை சரியாக அமைக்கவில்லை என்ற கோபம் அமித் ஷாவிற்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.