அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தி கணேஷ் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்.
ஆர்த்தி கணேஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் ஆர்த்தி கணேஷ். பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கிய இவர், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். நடிகை ஆர்த்தி கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைப்பு
கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இருந்து விலகிய அவர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் ஆர்த்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்.
இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஆர்த்தி கணேஷை மகிழ்வுடன் வரவேற்பதாக தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
