கரூர் தொகுதி நம்ம பக்கமே...எங்க பாலாஜி தங்க பாலாஜி!! வைரலாகும் செந்தில் பாலாஜி பாடல்
சிறையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி விரைவில் வெளிவர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி
தமிழகத்தின் மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் ஒரு வருடத்தை நெருங்கி சிறையில் அடைப்பட்டுள்ளார்.
இவரது ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தானே முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தங்க பாலாஜி...
சிறையில் இருக்கும் போதிலும், செந்தில் பாலாஜி பெயர் தேர்தல் களத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மிகவும் அழுத்தமாக அடிபட்டு கொண்டே இருக்கிறது. முதல்வர் முதல் அமைச்சர்கள் என பலரும் அவரை குறித்து பேசி வருகின்றனர்.
தொடர்ந்து சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மீது அண்மையில் கூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனத்தை வைத்து வருகின்றார்.
இந்த சூழலில் தான், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவருக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுளள்னர். எங்க செந்தில் பாலாஜி தங்க பாலாஜி என்ற பாடல் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.