வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்கலாம்?
மவுத் டேப்பிங் எனப்படும் ஸ்லீப்மேக்ஸிங் முறை வைரலாகி வருகிறது.
மவுத் டேப்பிங்
லண்டனில் உள்ள உடல்நலப் பயிற்சியாளரான லிசா டீ மற்றும் நியூயார்க்கில் உள்ள சமூக வலைதளப் பிரபலமான டெவோன் கெல்லி ஆகிய இருவரும்
தங்கள் உறங்குவதற்கு முன்பு தாங்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக மவுத் டேப்பிங் முறையை பின்பற்றுகின்றனர். இது நாசி மூலம் சுவாசத்தை ஊக்குவிக்க, வாயை மூடிக்கொண்டு, உதடுகளை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் முறை.
இவ்வாறு செய்வதன் மூலம், ஏடிஎச்டி அறிகுறிகள் குறையத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர். (நன்றாக உறங்குவதற்கு உதவி புரிவதாக கூறப்படுகிறது) இதுதொடர்பான வீடியோக்கள் படு வைரலாகி வருகிறது.
ஸ்லீப்மேக்ஸிங் முறை
சில முறைகள் பாதிப்பில்லாதவையாக தோன்றினாலும், அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நிபுணர்கள், வாயை மூடிக்கொண்டு உறங்குவது தீவிரமான ஆபத்துகளை உருவாக்கக்கூடும்.
இந்த நடைமுறையானது வாய் பகுதியில் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் இரவில் சுவாசிக்க சிரமப்படும்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்களால் முழுமையாக மூச்சை உள்ளிழுக்க முடியாது.
இது உங்கள் இதயத்தை அழுத்தலாம் அல்லது மாரடைப்பைத் தூண்டலாம் என எச்சரிக்கின்றனர்.