2 நாள் மட்டும்தான் மாதவிடாய் உதிரப்போக்கு இருக்கிறதா?
ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே மாதவிடாய் நின்று விடுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
மாதவிடாய்
மாதவிடாய் கால சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். அதீத மாதவிடாயும் பிரச்சனைக்குரியதுதான். குறைவான நாட்கள் வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான்.
குறைவான மாதவிடாய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக மன அழுத்தம் கூறப்படுகிறது. ஏனெனில் மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு நீங்கள் முயற்சிகள் மேற்கொண்டால் உங்கள் மாதவிடாய் சாதாரணமாக மாறிவிடும்.
குறைவான அளவு
தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் போது மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு குறைவாக வெளியேறலாம். தீவிர உடற்பயிற்சி அண்ட விடுப்பை கட்டுப்படுத்தி ஹார்மோன்கள் இயல்பாக சுரப்பதை தடுக்கிறது. நோய் பாதிப்பு அல்லது பிரச்சனைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் அது மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பி சி ஓ எஸ், தைராய்டு, கருப்பை சார்ந்த நோய் பாதிப்புகள், பால்வினை நோய்கள் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு குறைவான ரத்தப்போக்கு இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவாக இருக்கும் போது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்கள் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.