திருமணமாகி 45 நாட்கள்தான்..கணவருடன் ஆசையாக சென்ற மனைவி -வீட்டிற்கு சடலமாக வந்த கொடூரம்!
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுப்பெண் விபத்தில் சிக்கி, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா. 29 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வ பிரியா (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றுள்ளார். அப்போது கவரப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே செல்லும் போது,
பலி
எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுனா ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால் இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த விஸ்வ பிரியா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.