ஆசையாக காதலி வீட்டிற்கு சென்ற காதலன்..தெரியவந்த உண்மை - அடுத்து நடந்த சம்பவம்!

Tamil nadu Crime Death Tirunelveli
By Swetha Oct 16, 2024 10:30 AM GMT
Report

காதலில் ஏமாற்றமடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

காதலன்..

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் மணிகண்டன்.தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்துமுடித்துவிட்டு தனது சகோதரருடன் சேர்ந்து விவசாயம் செய்துவருகிறார்.

ஆசையாக காதலி வீட்டிற்கு சென்ற காதலன்..தெரியவந்த உண்மை - அடுத்து நடந்த சம்பவம்! | Gilfriend Cheats Youth Commits Suicide And Died

இதனிடையே மணிகண்டன் கோடீஸ்வரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சில நாட்களுக்கு முன்பு இரவு தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது தனது காதலி வேறு ஒருவருடன் பேசி வந்தது மணிகண்டனுக்கு தெரியவந்தது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர் அங்கிருந்தபடியே அவரது தாயாரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு

உண்மை..

தனது காதலி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.அதை தொடர்ந்து, இந்த சம்பவத்தால் மீளா துயரத்தில் துடித்த மணிகண்டன்

ஆசையாக காதலி வீட்டிற்கு சென்ற காதலன்..தெரியவந்த உண்மை - அடுத்து நடந்த சம்பவம்! | Gilfriend Cheats Youth Commits Suicide And Died

காதலியின் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு

பிரேதபரிசோதனைகாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.