கோபத்தில் திட்டிய தாய்..மகள் எடுத்த வீபரித முடிவு - நிலைகுலைந்த பெற்றோர்!

Crime Death Tirunelveli
By Vidhya Senthil Nov 11, 2024 10:52 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

   பள்ளிக்குச் செல்லாததை மகளைத் தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 கண்டித்த  தாய்

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை பகுதியில் வசித்து வருபவர் கட்டிடத் தொழிலாளி ஜேக்கப் சுதன் . இவரது மனைவி ஞானசெல்வம். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சுழலில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

stress

தந்தை ஜேக்கப் சுதனுடன் மகன் ஜெபராஜ், தூத்துக்குடியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். அதே போல் தாய் ஞானசெல்வத்துடன் அவரது மகள் பெட்டை குளத்தில் வசித்து வந்துள்ளார். அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஆசையாக திருமண ஷாப்பிங் செய்த மணமகன் - அடுத்த நொடியில் நேர்ந்த பயங்கரம்!

ஆசையாக திருமண ஷாப்பிங் செய்த மணமகன் - அடுத்த நொடியில் நேர்ந்த பயங்கரம்!

இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்துள்ளார். இதனால் கோவத்தில் தாய் ஞானசெல்வம் கண்டித்து பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு ஞானசெல்வம் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டார்.

தற்கொலை 

ஆனால் அவரது மகள் மன உளைச்சலில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த ஞானசெல்வம் தனது மகள் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்துக் கதறி அழுதார்.

suicide

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.