நீட் பயிற்சிக்கு சென்ற மாணவி- 6 மாதம் வீட்டில்..ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!
நீட் பயிற்சி வகுப்புக்குச் சென்ற மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் பிரபல நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுபதேப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்விற்கு தயாராக இந்த மையத்தில் சேர்ந்துள்ளார்.
இந்த பயிற்சி மையத்தில் பணியாற்றி உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திக் என்பவர் வந்த கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர் சித்திக் மற்றும் வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் தொடர்ந்து 6 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு மாணவியை மிரட்டியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
தொடக்கத்தில் காவல்நிலையம் போக தயக்கம் காட்டிய அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா?என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.