ஆசையாக திருமண ஷாப்பிங் செய்த மணமகன் - அடுத்த நொடியில் நேர்ந்த பயங்கரம்!

Crime Bihar Death
By Vidhya Senthil Nov 11, 2024 09:48 AM GMT
Report

   திருமண ஷாப்பிங் முடித்துவிட்டு மணமகன் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

   திருமண ஷாப்பிங்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் என்பவருக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடைப்பெற இருந்தது. மேலும் திருமணத்துக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் மணமகன் சவுரப்பிற்கு ‘திலக்’ அதாவது (குங்குமம்) வைக்கும் விழா வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

bihar

இந்நிலையில் திருமணப் பொருட்களை வாங்குவதற்காக சவுரப், அவரது சகோதர் கவுரவ் மற்றும் தந்தை சஞ்சய் குமார் ஆகியோருடன் காசியாபாத்திற்கு காரில் சென்றிருந்தனர்.

பசியோடு வந்த கணவர்..மதிக்காமல் போன் பார்த்த மனைவி - கடைசியில் நேர்ந்த கொடூரம்!

பசியோடு வந்த கணவர்..மதிக்காமல் போன் பார்த்த மனைவி - கடைசியில் நேர்ந்த கொடூரம்!

 விபத்து 

 அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு காசியாபாத்திலிருந்து காகோரி டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்தது .அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிரெய்லர் டிரக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் சவுரவ்வின் சகோதரர் கவுரவ் உயிரிழந்துள்ளார்.

death

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சவுரவ் மற்றும் அவரது தந்தை சஞ்ஜீவ் குமார் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.