ஒரே வீட்டில் 2 மனைவிகள்.. 50 முறை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர வைத்த சம்பவம்!
இளம்பெண் ஒருவர் 50 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருள்ளது.
2 மனைவிகள்..
மத்தியபிரதேச மாநிலம், ரிவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது ஜெயாவுக்கு 26 வயது. திடீரேன அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து,
கடந்த 2021ம் ஆண்டு மன்சி என்ற 22 வயதுடைய பெண்ணை ராம்பாபு 2வதாக திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு மூவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தீபாவளியன்று இரவு நேரத்தில் ஜெயாவுக்கும், மன்சிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் கணவனின் முதல் மனைவியான ஜெயாவை, 2வது மனைவி மன்சி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். தொடர்ந்து 50 முறை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
குத்திய இளம்பெண்
இதனால் வலியில் துடித்துடித்த ஜெயா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். ஜெயா அலறியதை கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே அங்கு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கத்தி குத்தி தாக்குதல் நடத்திய மன்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை,
அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு நினைவு திரும்பினால்தான், அவரிடம் வாக்குமூலம் பெற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஜெயாவின் நிலை சீரியஸாக உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.