Tuesday, Jun 17, 2025

சைட் அடிச்சது ஒரு குத்தமா?.. ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய பெண் - ஷாக்!

Attempted Murder United States of America
By Vinothini 2 years ago
Vinothini

Vinothini

in உலகம்
Report

பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் சைட் அடித்ததால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைட் அடித்த நபர்

அமெரிக்கா, மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். அந்த ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்து சைட் அடித்துள்ளார். இவர் இவ்வாறு அடிக்கடி பார்த்து வந்ததால் ஜிமினெஸ் பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.

women attacked her boyfriend with rabies injection

இதனிடையே அந்த ஆண் நண்பர் தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) வீட்டில் வாங்கி வைத்துள்ளார். மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஜிமினெஸ் அந்த ஊசியை எடுத்து ஆண் நபரின் கண்ணில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

வாலிபர்களுடன் ஆடிய 18 வயது பெண்.. வெளியான வீடியோ, ஊர் பஞ்சாயத்து வழங்கிய கொடூர தீர்ப்பு- ஷாக்!

வாலிபர்களுடன் ஆடிய 18 வயது பெண்.. வெளியான வீடியோ, ஊர் பஞ்சாயத்து வழங்கிய கொடூர தீர்ப்பு- ஷாக்!

விசாரணை

இந்நிலையில், காயமடைந்த அந்த ஆண் நண்பர் காவல் துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் விரைந்து அவரது வீட்டிற்கு சென்று ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.

women attacked her boyfriend with rabies injection

மேலும், விசாரணை நடத்தியதில், அவரது கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.