பசியோடு வந்த கணவர்..மதிக்காமல் போன் பார்த்த மனைவி - கடைசியில் நேர்ந்த கொடூரம்!

Karnataka Crime Death
By Vidhya Senthil Nov 11, 2024 09:13 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  தனக்கு உணவு பரிமாறாத ஆத்திரத்தில் மனைவியைக் கணவன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனு கவுரம்மா தம்பதியினர். மனு அதே பகுதியில் உள்ள கார்மென்ட் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மனைவி கவுரம்மா அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

தனக்கு உணவு பரிமாறாத ஆத்திரத்தில் மனைவியைக் கணவன் கொலை

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு மனு வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு உணவு பரிமாறுமாறு மனைவி கவுரம்மவிடம் மனு கேட்டுள்ளார்.

ஒரே வீட்டில் 2 மனைவிகள்.. 50 முறை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர வைத்த சம்பவம்!

ஒரே வீட்டில் 2 மனைவிகள்.. 50 முறை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர வைத்த சம்பவம்!

ஆனால், கவுரம்மவிடம் தனது செல்போனில் தொடர்ந்து கால் பேசிக் கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து தனக்கு சாப்பாடு போடுமாறு மனு கேட்கவே, அதற்கு கவுரம்மா நீங்களே பரிமாறிச் சாப்பிட வேண்டியது தானே, என்னையே ஏன் தொல்லை செய்கிறீர்கள் என்று கோவமாகக் கூறியுள்ளார்.

  மனைவி கொலை 

இதனால் ஆத்திரமடைந்த மனு வீட்டிலிருந்த துணியை எடுத்து கவுரம்மாவின் கழுத்தை நெரித்துள்ளார்.இதில் கவுரம்மா மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தனது மாமனாருக்கு போன் செய்து மனு நடந்ததை அனைத்தையும் கூறிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

karnataka husband kill wife

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுரம்மவின் தந்தை கதறி அழுந்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மனுவைத் தேடி வருகின்றனர்.