கள்ளக்காதலை கைவிட்ட தாய் - ஆத்திரத்தில் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொலை!
கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணின் குழந்தைகளை காதலன் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
தர்மபுரி, ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முண்டாசு புறவடையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கியிருந்தனர். அதேப் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேஷ் (27) என்பவருக்கும் பிரியாவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென பிரியா அந்த உறவை துண்டித்துள்ளார்.
குழந்தைகள் கொலை
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், பிரியாவின் 2 மகன்களை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களது கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் வெங்கடேசை கைது செய்தனர். இதனையடுத்து அவர் போலீஸ் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு தப்பி சென்று அங்குள்ள மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.