தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகை.. ரூ.700-க்கு விற்ற மகள் - காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
இளம் பெண் ஒருவர் தனது தாயின் தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகையை ரூ.700-க்கு விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனா
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.2 கோடி) மதிப்பிலான நகைகளைக் காணவில்லை என ஷாங்காய் வான்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அந்த பெண்ணின் மகள் மகள் லீ தான் அந்த நகைகளைத் திருடி விற்றது தெரிய வந்தது. இது குறித்து மகள் லீயிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரூ.1.2 கோடி மதிப்பு
அப்போது காது, உதடு அணிகலன்கள் உள்பட அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டது. இது குறித்து தனது தாயிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தார்.இதனால் வீட்டிலிருந்த நகைகளை கவரிங் என நினைத்து எடுத்துச் சென்று அவற்றை ரூ.700-க்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாகக் கூறி உள்ளார்.
இதனையடுத்து நகைகளை விற்ற கடைக்குச் சென்ற காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடையிலிருந்த நகைகளை மீட்டு தாயாரிடம் திருப்பி கொடுத்தனர்.