திருமணம் முடிந்ததும் மணப்பெண் செய்த காரியம் - மிரண்டு போன மாப்பிளை
திருமணம் முடிந்ததும் புதுப்பெண் மாயமானதால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தப்பியோடிய மணப்பெண்
இமாச்சலப்பிரதேசம், சகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேஷ் சர்மா. இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களில் மனைவி பணம் நகையுடன் புதுப்பெண் தப்பி ஓடியுள்ளார்.
உடனே இதுகுறித்து ஜிதேஷ் போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலம், பபிதா என்ற பெண்ணை நான் சந்தித்தேன். திருமணத்திற்காக பால்தேவ் ரூ. 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கினார்.
கதறிய இளைஞர்
நிச்சயிக்கப்பட்டபடி, கடந்த டிசம்பர் 13-ந்தேதி பபிதாவை கோவிலில் வைத்து திருமணம் செய்தேன். பெண்ணுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் பதிவு திருமணம் செய்யாமல் கோவிலில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்தேன். திருமணம் முடிந்த சில நாட்களில் தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை.
பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு பபிதா சென்றார். 2 நாட்களுக்குப் பின்பு அவர் திரும்ப வராமல் இருந்ததுடன் போன் அழைப்புகளையும் எடுக்கவில்லை. அவர் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்று ஏமாற்றிவிட்டார். தரகர் பால்தேவ் சர்மாவும் அழைப்புகளை ஏற்க மறுக்கிறார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.